Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்

T

The Leader Desk

ஜனவரி 30, 2023 • 4:21 AM

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
  • இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) திகதி நடைபெற்றது.
  • இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், இவர்களின் வாழ்வில் சொல்லக்கூடிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
  • இந்த 200 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் கூட எங்களுக்கு என்று தனியான வீடு கிடையாது, காணி கிடையாது ஒழுங்கான பாதைகள், பாடசாலை, கல்வி, சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
எழுத்து அளவு:

200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்ட பாரிய ஊர்வலம் ஒன்று இன்று (29) திகதி நடைபெற்றது.

குறித்த, ஊர்வலம் அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து அட்டன் நகர் ஊடாக அட்டன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்தது.

குறித்த ஊர்வலத்தில் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்?மலையக மக்களை சிதைக்காதே?உறுதியளித்த பல்கலைக்கழகம் எங்கே? மலையக மக்களை சிதைக்காதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஊர்வலத்தில் சென்றதுடன், இவர்கள் இந்தியாவிலிருந்து வரும் போது கொண்டு வந்த கலை அம்சங்களும் இதன் போது இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து அட்டன் டி.கே.டப்ளியு கலாச்சார மண்டபத்தில் கலை, கலாச்சார அம்சங்கள் இடம்பெற்றதுடன் அவர்கள் தொடர்பான விசேட கருத்துரையும் இடம்பெற்றன.

இது குறித்த பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், இவர்களின் வாழ்வில் சொல்லக்கூடிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. இந்த 200 வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் கூட எங்களுக்கு என்று தனியான வீடு கிடையாது,

காணி கிடையாது ஒழுங்கான பாதைகள், பாடசாலை, கல்வி, சுகாதார உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இதனை எடுத்து கூறும் முகமாகதான் இந்த 200 வருட ஊர்வலத்தினை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்காலத்திலாவுது இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவார்கள் என்று நம்புகின்றோம் என தெரிவித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய கிறிஸ்துவ குழு லங்கா சபை, மெதடிஸ்ட் தேவஸ்தானம் உட்பட அருட் தந்தையர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறித்த ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பொது மக்கள் என சுமார் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மலையக மக்களின் 200 வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம் | Tamil Leader | We Lead the Nation