Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வாக்குச் சீட்டு அச்சிட ரூ. 200 மில்லியன் செலவு

T

The Leader Desk

ஜனவரி 30, 2023 • 4:32 AM

வாக்குச் சீட்டு அச்சிட ரூ. 200 மில்லியன் செலவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆய்வு உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிவடைந்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்ததும் அச்சடிக்கும் பணி தொடங்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான ஏனைய ஆவணங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இக்கடிதத்தில் கோரியுள்ளார்.

தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் தான் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து அரச அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டையும் அவர் கோரியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு சில அரச நிறுவனங்கள் முழுமையாக ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆதரவை, ஜனாதிபதி தலையிட்டு வழங்க வேண்டும் என நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வாக்குச் சீட்டு அச்சிட ரூ. 200 மில்லியன் செலவு | Tamil Leader | We Lead the Nation