Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

2 வருடங்களாக தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 வயது சிறுமி எடுத்த அதிரடி முடிவு

T

The Leader Desk

டிசம்பர் 28, 2022 • 4:10 AM

2 வருடங்களாக தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 வயது சிறுமி எடுத்த அதிரடி முடிவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர்.
  • வயதான சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னேவ பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
  • கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தில் இருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னேவ பிரதேசத்திற்கு வந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
  • சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஐந்தாம் வகுப்பில் வயதிற்கு வந்துள்ளதாகவும் அன்றிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:

முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர்.

12 வயதான சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று கல்னேவ பொலிஸாரிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கம்பளை பிரதேசத்தில் இருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்னேவ பிரதேசத்திற்கு வந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஐந்தாம் வகுப்பில் வயதிற்கு வந்துள்ளதாகவும் அன்றிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

5 நாட்களுக்கு முன்னர், சிறுமியின் தாய், கம்பளைக்கு தேயிலை பறிக்கச் சென்ற போது, ​​ சந்தேகநபரான தந்தை பல தடவைகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தனது தந்தையின் தொடர்ச்சியான பாலியல் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு வந்து அனைத்தை விடயங்களையும் தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், பொலிஸ் குழுவொன்று உடனடியாக வீட்டுக்குச் சென்றபோது, ​​சந்தேகநபரான தந்தை பிரதேசத்தை விட்டு வெளியேறி ஓடிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவத்தை எதிர்கொண்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2 வருடங்களாக தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 வயது சிறுமி எடுத்த அதிரடி முடிவு | Tamil Leader | We Lead the Nation