Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தளர்த்தப்பட்ட ஊரடங்கு பிற்பகல் 2.00மணிக்கு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது!

T

The Leader Desk

மார்ச் 30, 2020 • 10:37 AM

தளர்த்தப்பட்ட ஊரடங்கு பிற்பகல் 2.00மணிக்கு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர்.
  • ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
  • எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.

அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போதும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.

பண்டாரவளை நகரில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த பிரதேசங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தளர்த்தப்பட்ட ஊரடங்கு பிற்பகல் 2.00மணிக்கு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது! | Tamil Leader | We Lead the Nation