Tamil Leader News
முக்கியம்
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: நாளை சூறாவளியாக வலுப்பெற வாய்ப்பு – சிவப்பு எச்சரிக்கை!●5 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி, 2 மாதச் சிசுவுடன் குகையிலிருந்து மீட்பு; அமைச்சர் விசேட அறிக்கை!●முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் காலமானார்!●லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்!●பன்மைவாதத்துக்கு அப்பால்: உலகளாவிய அதிகாரத்தின் புதிய விதிகளும் இந்தியாவின் சவால்களும்!●ஜனாதிபதி சட்டத்தரணி எழுதிய ‘BLOOD LACED TEARS’ நூல் வெளியீடு!●'கடந்த காலத்தில் எமது பொறுப்பு கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது எமது பொறுப்பு நாட்டு மக்கள்!'●மருந்துத் தொழிற்சாலைகளை அமைப்பதால் டொலர்கள் சேமிக்கப்படுமா? உண்மையான பொருளாதாரக் கதை இதோ!●முதலீட்டாளர்களை வென்றெடுக்க வேண்டுமெனில் 'பெயருக்குப்' பதிலாக 'முறைமை' மாற வேண்டும்!●பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 2 டிரில்லியன் மக்களுக்குச் சென்றடையுமா?●
செய்திகள்

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் காலமானார்!

Menaka

Menaka

நவம்பர் 15, 2026 • 8:35 AM

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.
  • உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது.
  • கடந்த சில காலமாகச் சுகவீனமுற்றிருந்த அவர், நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: கடந்த 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், அவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
எழுத்து அளவு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 69 வயது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு தடவைகள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், தற்போது வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகவும் (நகரபிதா) கடமையாற்றி வந்தார்.

கடந்த சில காலமாகச் சுகவீனமுற்றிருந்த அவர், நேற்று (14) இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

  • நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: கடந்த 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், அவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

  • ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபை: கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதுடன், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

போர் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்து, இப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டார். அத்துடன், பல தமிழ்க் கட்சிகளின் இணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் அவர் தீவிர பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலமான அன்னாரின் பூதவுடல் மீதான இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியில் நடைபெறவுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.

அரசியல் நகர்வுகள்

2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளைத் துணிவுடன் முன்னின்று நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.

ரெலோ அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த இவர், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

வடக்கு - கிழக்கு தமிழர் அரசியலின் மூத்த ஆளுமை எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார் | M K Sivajilingam Has Passed Away

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றினார்.

பின்னர் ரெலோ கட்சியிலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சியில் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த அவர், இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, தவிசாளராகப் பொறுப்பு வகித்து நகர அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.

அன்னாரது மறைவுக்குத் தமிழ் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...