இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் புளோரெஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (German Research Centre for Geosciences) தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல நில அதிர்வுகளும் பதிவாகியிருந்தன.
அந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதுடன், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கடல்சார் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்த இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையும் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனிடையே, நிலநடுக்கத்தினால் அப்பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை சீரமைக்கத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


