Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கிளிநொச்சியில் இன்று அர்ச்சுனா அட்டகாசம்; உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து!

T

The Leader Desk

ஜூலை 16, 2026 • 4:04 PM

கிளிநொச்சியில் இன்று அர்ச்சுனா அட்டகாசம்; உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் காரணமாகக் கடும் குழப்பங்களுக்கு மத்தியில் பாதியிலேயே முடிவுக்கு வந்தது.
  • கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று காலை 9 மணிக்குக் கூட்டம் ஆரம்பமானது.
  • காலை 9:15 மணியளவில் கூட்டத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் ஆரம்பம் முதலே அநாகரிகமாக நடந்துகொண்டார்.
  • முரண்பாடு முற்றிய நிலையில், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் அவரைத் தடுக்க முயன்றனர்.
எழுத்து அளவு:

குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் காரணமாகக் கடும் குழப்பங்களுக்கு மத்தியில் பாதியிலேயே முடிவுக்கு வந்தது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று காலை 9 மணிக்குக் கூட்டம் ஆரம்பமானது.

காலை 9:15 மணியளவில் கூட்டத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் ஆரம்பம் முதலே அநாகரிகமாக நடந்துகொண்டார்.

கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்வைத்த கருத்துகளுக்கு அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

இதனைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு,
சிறிதரன் எம்.பி. கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, திருவையாறு பகுதியில் அமைச்சர் லால் காந்தவின் தென்னை செய்கை விநியோகத் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று அர்ச்சுனா எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

எனினும், அந்தத் திட்டத்துக்கு இதுவரை கண்டித்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி விடுவிக்கப்படவில்லை என்றும், உர மானியம் வழங்கப்படவில்லை என்றும் கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.

இதனை ஏற்க மறுத்த அர்ச்சுனா எம்.பி., கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரைத் தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தியதுடன், ஊழல்வாதி என்றும் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த மாவட்ட அரச அதிபர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், ஆதாரம் இருப்பின் அதனை முன்வைக்குமாறு சவால்
விடுத்தார்.

இந்தக் கருத்து மோதலைத் தொடர்ந்து, அர்ச்சுனா எம்.பியின் ஒழுங்கீனமான மற்றும் தரக்குறைவான நடத்தையைக் நான்கு பிரதேச செயலாளர்களும், ஏனைய திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

அதிகாரிகள் வெளியேறிய பின்னரும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மோதலுக்கும் தயாரானர். முரண்பாடு முற்றிய நிலையில், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். இறுதியாக, பொலிஸார் தலையிட்டு அர்ச்சுனா எம்.
பியை அங்கிருந்து அழைத்துச் சென்றதையடுத்து, முற்பகல் 11 மணியளவில் கூட்டம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று (16.7.2026) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: "கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.

அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

அர்ச்சுனாவின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...