(வாள்) தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண் உட்பட மூவரை ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்திற்குப் பின்னால் வந்த காரொன்று, திடீரெனப் பேருந்த குறுக்கே நிறுத்தப்பட்டு, அக்காரிலிருந்து இறங்கிய ஒரு பெண்ணும் இரு ஆண்களும் வாளுடன் பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்றுள்ளனர்.
பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவர் இச்சம்பவத்தைத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்திருந்ததுடன், அக்ககாணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
அந்தக் காணொளிக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த காரில் பயணித்த சந்தேகநபர்களைத் திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றைய தினம் (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவானால் இவ்வாறு ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.


