அளவுகோலில் 6.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை அந்நாட்டில் இடம்பெற்ற உயிராபத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஏற்பட்டுச் சில மணிநேரங்களிலேயே இந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை 3:28 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் இலங்கைக்கு எந்தவொரு சுனாமி அபாயமும் இல்லை எனத் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அம்மையம், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகாலை 08:00 மணி நிலவரம் - இந்தோனேசிய நிலநடுக்கத்தில் இருவர் பலி
இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை 3:28 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் அதிர்வுகள் (Aftershocks) ஏற்பட்டதை அடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் முகமையினால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், பின்னர் அந்தச் சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டின் தேசிய புவியியல் முகமை திரும்பப் பெற்றுக்கொண்டது.
இலங்கைக்கு ஆபத்து இல்லை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களமும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
அதில், இந்த நிலநடுக்கத்தால் பிற நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இலங்கைக்கு அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம், நாட்டின் கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


