மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் தொடுத்த எதிர்த்தாக்குதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் (Crude Oil) விலை இன்றைய தினம் (15 ஆம் திகதி) மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 86.19 டொலர்கள் வரையிலும், டப்ளியூ.டி.ஐ. (WTI) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 80.40 டொலர்கள் வரையிலும் அதிகரித்துள்ளன. இது கடந்த ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்கு பின்னர் பதிவாகிய மிக உயர்ந்த விலை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள யுத்த அபாய நிலைமை காரணமாக எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளமையே இந்த விலை ஏற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


