Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வத்தளை துப்பாக்கிச் சூடு; இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல்

T

The Leader Desk

ஆகஸ்ட் 14, 2026 • 3:41 AM

வத்தளை துப்பாக்கிச் சூடு; இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள்.
எழுத்து அளவு:

விருந்தொன்றின் போது நபரொருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பின்னர் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இன்று (13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவரும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஸ்வரன் லுசிநாத் மற்றும் 34 வயதுடைய கணேசன் விக்னேஸ்வரன் என தெரியவந்துள்ளது. 

அவர்கள் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவது தொடர்பில் இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைவாக விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கடந்த ஜூலை 23ஆம் திகதி இரவு வத்தளைப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வத்தளை துப்பாக்கிச் சூடு; இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல் | Tamil Leader | We Lead the Nation