Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

உலகின் சிறந்த 50 உணவுத்தளங்களின் பட்டியலில் இலங்கை!

T

The Leader Desk

ஜூலை 14, 2026 • 6:19 AM

உலகின் சிறந்த 50 உணவுத்தளங்களின் பட்டியலில் இலங்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண்டுக்காக வெளியிடப்பட்ட உலகின் மிகச்சிறந்த 50 உணவுத்தளங்களின் (Food Destinations) பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
  • உணவு என்பது வெறும் போஷாக்கு மாத்திரமல்ல, அது ஒரு நாட்டின் கலாசார அடையாளத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் ஓர் அரிய அனுபவம் என்பதை இந்தத் தரப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.
  • இப்பட்டியலில் இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், முதல் ஐந்து இடங்களை முறையே மெக்சிகோ, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தனதாக்கியுள்ளன.
எழுத்து அளவு:

ஆண்டுக்காக வெளியிடப்பட்ட உலகின் மிகச்சிறந்த 50 உணவுத்தளங்களின் (Food Destinations) பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மாத்திரமே உரித்தான நறுமணமிக்க வாசனைத்திரவியங்கள் மற்றும் பல நூற்றாண்டு கால கலாசார பாரம்பரியம் உள்ளிட்ட பல காரணிகள் இந்த சர்வதேச அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் நுவரெலியா போன்ற நகரங்களில் காணப்படும் தனித்துவமான உணவு கலாசாரமும் உள்நாட்டு சுவைகளும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

உணவு என்பது வெறும் போஷாக்கு மாத்திரமல்ல, அது ஒரு நாட்டின் கலாசார அடையாளத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் ஓர் அரிய அனுபவம் என்பதை இந்தத் தரப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.

இப்பட்டியலில் இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், முதல் ஐந்து இடங்களை முறையே மெக்சிகோ, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தனதாக்கியுள்ளன.

இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்கள் பல்வேறு வகையான உணவுகளுக்காக இந்தத் தரப்படுத்தலின் ஊடாக விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு, காலி, கண்டி, நீர்கொழும்பு, எல்ல, யாழ்ப்பாணம், மிரிஸ்ஸ, நுவரெலியா, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் உணவுக்கான தனித்துவமான சுற்றுலாத்தலங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...