Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என விசாரணை!

T

The Leader Desk

ஜூலை 14, 2026 • 5:55 AM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சதித்திட்டங்கள் அடங்கிய வேலைத்திட்டம் காணப்பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
  • அந்த விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாகவே எம்மால் இறுதி முடிவை உறுதியாகக் கூற முடியும்." "சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான சனநெரிசலானது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சினையாகும்.
  • அத்துடன், காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

சதித்திட்டங்கள் அடங்கிய வேலைத்திட்டம் காணப்பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்திற்குள் நிறுவப்படும் புதிய சிறைச்சாலையும், காலி - மகாமுதலியார் (மஹமோதர) பழைய வைத்தியசாலை வளாகம் புதிய சிறைச்சாலையாக மாற்றப்படுவதும் சில மாதங்களுக்கு மாத்திரமே என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி இங்கு குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை நெரிசலுக்கு அரசாங்கத்தின் தீர்வுகள் கிடைத்த பின்னர், இந்த இரண்டு சிறைச்சாலைகளும் அங்கிருந்து அகற்றப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்ட வேலைத்திட்டங்கள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்திற்கு அமைவாகவே எம்மால் இறுதி முடிவை உறுதியாகக் கூற முடியும்."

"சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான சனநெரிசலானது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சினையாகும். இதன் காரணமாக உள்ளக ரீதியாகப் பல சிக்கல்கள் உருவாகின்றன. வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன."

"காலி மஹமோதர பழைய வைத்தியசாலை மற்றும் கண்டி போகம்பறை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாம் தொடர்ந்தும் சிறைச்சாலைகளாக நடத்திச் செல்ல எதிர்பார்க்கவில்லை. அவற்றுக்காக எம்மிடம் வேறு திட்டங்கள் உள்ளன. எனினும், இந்த சந்தர்ப்பத்தில் உடனடித் தீர்வாக சில மாதங்களுக்கு மாத்திரமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

"சில மாதங்களுக்கு மாத்திரமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் எட்டப்படும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் அங்கிருந்து அகற்றப்படும்."

இதேவேளை, பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த 8ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன், காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...