Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2023 • 2:31 AM

 ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று முன்தினம் (12) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
  • களில் இருந்து ஊடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய சத்தியமூர்த்தி 2009 பெப்ரவரி 12ஆம் திகதி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலால் உயிரிழந்தார்.
  • அத்துடன், ஊடகத்துறையில் 1990களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் ‘வெளிச்சம்’ சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார்.
  • ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார்.
எழுத்து அளவு:

 

நேற்று முன்தினம் (12) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளரின் உருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

90களில் இருந்து ஊடகத்துறையில் ஈடுபடத் தொடங்கிய சத்தியமூர்த்தி 2009 பெப்ரவரி 12ஆம் திகதி முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலால் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண மாவட்டம் - மண்டைதீவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

அத்துடன், ஊடகத்துறையில் 1990களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் ‘வெளிச்சம்’ சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார்.

ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார். தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார்.

நாட்டுப்பற்றாளர் விருது

படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...