ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கல்வி கற்று வந்த வாலிபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கொலையை அவருடன் விடுதியில் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை வாலிபர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சந்தேக நபரான 18 வயது வாலிபரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தன்னையும் தனது தாயாரையும் அவமதித்ததால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


