Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

காங்கேசன்துறை நகராந்தர அதிவிரைவு ரயில் சேவை நாளை முதல் மீண்டும் வழமைக்கு!

T

The Leader Desk

ஜூலை 13, 2026 • 4:48 PM

காங்கேசன்துறை நகராந்தர அதிவிரைவு ரயில் சேவை நாளை முதல் மீண்டும் வழமைக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரயில் (Intercity Express) சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே திணைக்களத்தினால் முன்னர் எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு, நாளை (14) முதல் மீண்டும் வழமை போல் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இருப்பினும், இந்த வாராந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கிற்கான ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிடும் என்பதை ரயில்வே தொழிற்சங்கங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தன.
  • ரயில் என்ஜின்கள் மற்றும் உபகரணங்களின் (Power Sets) தட்டுப்பாடு காரணமாக, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்னதாகத் தீர்மானித்திருந்தது.
எழுத்து அளவு:

ரயில் (Intercity Express) சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே திணைக்களத்தினால் முன்னர் எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டு, நாளை (14) முதல் மீண்டும் வழமை போல் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் என்ஜின்கள் மற்றும் உபகரணங்களின் (Power Sets) தட்டுப்பாடு காரணமாக, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்னதாகத் தீர்மானித்திருந்தது.

இருப்பினும், இந்த வாராந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கிற்கான ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிடும் என்பதை ரயில்வே தொழிற்சங்கங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு, முன்னர் ரத்துச் செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர அதிவிரைவு ரயிலை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, பயணிகள் எவ்வித தடையுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவையை வழமை போன்று பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...