Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'இலங்கை பௌத்த நாடு; 13ஐ முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரம் இது'

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2023 • 3:54 AM

'இலங்கை பௌத்த நாடு; 13ஐ முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரம் இது'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார்.
  • அவர் மேலும் கூறுகையில், "அண்ணாமலை கூறுவது போல் 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது.
  • ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
  • இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல.
எழுத்து அளவு:

வகையிலேயே தமிழக பாரதிய ஜனதாத் கட்சித் தலைவர் கே.அண்ணாமலை கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு எதிராக இலங்கை அரசு போர்க்கொடி தூக்கக்கூடாது என்பதற்காகவே வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த விசமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோடியில் கைகளில்தான் உள்ளன என்று இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் சென்னையில் வைத்து பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே சரத் வீரசேகர மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"அண்ணாமலை கூறுவது போல் 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வாக அமையாது. ஏனெனில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் அல்ல. 13ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் ஊடாக முழுமையாக இல்லாதொழிப்பதற்கான நேரமே கனிந்துள்ளது. இலங்கையில் 13 க்கு எதிராக பிக்குகள் கூட வீதியில் இறங்கியுள்ளமை அண்ணாமலைக்குத் தெரியவில்லையா? இது பௌத்த நாடு என்பதை அவர் மறந்துவிட்டாரா?" என்றார்.

இதேவேளை, "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களின் போது மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி போட்டியிட்டாலும் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்ற நிலையையே தற்போது காணப்படுகின்றது." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வடக்கையும் கிழக்கையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலே இலங்கை அரசு எப்போது தாரைவார்த்தது? வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவராக மோடி எப்போது பிரகடனப்படுத்தப்பட்டார்? அண்ணாமலையின் கருத்துக்கள் ஊடாக எம்மிடம் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்.

அண்ணாமலை அண்மையில் இலங்கை வந்து தமிழகம் திரும்பிய பின்னர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன் பின்புலம் தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒரு தரப்பினர் பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த, அண்ணாமலை மோடியையும் வடக்கு - கிழக்கையும் இணைத்துப் பேசி அரசியல் நடத்துகின்றார். இலங்கை அரசு இவற்றையெல்லாம் கைகட்டி ஏன் வேடிக்கை பார்க்கின்றது? எல்லாம் மர்மமாகவே உள்ளது" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...