Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

13ஐ நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை; மோடியை சந்திக்க தமிழ்த் தரப்பு கோரிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 13, 2023 • 4:11 AM

13ஐ நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை; மோடியை சந்திக்க தமிழ்த் தரப்பு கோரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இந்தச் சந்திப்பின்போதே, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.
  • "13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தனர்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசாங்கம், இந்திய அரசு என்ற முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.
எழுத்து அளவு:

அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை யாழ். நகரிலுள்ள ஹோட்டலில் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போதே, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.

"13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருந்தனர்.

அவ்வாறு கோரிக்கை வைப்பதன் ஊடாக மாத்திரம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசாங்கம், இந்திய அரசு என்ற முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும். அதை இந்திய அரசு செய்யவேண்டும்" - என்ற கோரிக்கையை முன்வைத்தாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைத்துத் தருமாறு இந்தச் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

13ஐ நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை; மோடியை சந்திக்க தமிழ்த் தரப்பு கோரிக்கை | Tamil Leader | We Lead the Nation