Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

13ஆம் திருத்தம், புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தேரர்கள், தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்; அமெரிக்கா எச்சரிக்கை

T

The Leader Desk

பிப்ரவரி 8, 2023 • 4:03 AM

13ஆம் திருத்தம், புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தேரர்கள், தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டம்; அமெரிக்கா எச்சரிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
  • தேரர்களை கொழும்பிற்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்த தேரர்கள் 13 ஆம் திருத்தத்தை நீக்கவேண்டும் என்றனர்.
  • அதன்படி கொழும்பிலுள்ள அமெரிக்க பிரஜைகள், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேசிய பௌத்த பிக்குகள் முன்னணியினர் முற்பகல் 9.30 மணிக்கு விக்டோரியா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

5000 தேரர்களை கொழும்பிற்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்த தேரர்கள் 13 ஆம் திருத்தத்தை நீக்கவேண்டும் என்றனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டிலுள்ள பல தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார தொழிற்சங்கங்கள், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், பல்கலைக்கழ நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்கள் சங்கம் ஆகியன இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

அதேநேரம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணியாளர்களும் மதியத்துடன் வங்கிச் சேவைகளை நிறுத்தி, வரி வசூலிப்புக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

இன்றைய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அதன்படி கொழும்பிலுள்ள அமெரிக்க பிரஜைகள், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பைச் சுற்றிப் பயணிப்பது கடினமாகலாம் எனவும் வீதிகள் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பௌத்த பிக்குகள் முன்னணியினர் முற்பகல் 9.30 மணிக்கு விக்டோரியா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த குழு இடம்மாறி கொழும்பு முழுவதும் செல்லலாம். தொழிற்சங்கங்களின் பேரவை பிற்பகல் 2 மணிக்கு யூனியன்பிளேஸ் ஹைப் பார்க் நோக்கி பேரணியாக செல்வதற்கு முன்னர் கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மருதானை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஒன்றுகூடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது.

எனவே இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்குமாறும், பெரிய கூட்டங்கள், எதிர்ப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...