Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்

T

The Leader Desk

மார்ச் 12, 2023 • 4:14 AM

கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
  • இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கையில், தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் தரவுகள் தொடர்பான முறைமையில் ஏற்பட்ட பிழையை சரிசெய்து இன்று (11) வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

மத்துகம நீதிமன்றில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகிந்தானந்த அளுத்கமகே தனது வெளிநாட்டு பயணத்தை இரத்து செய்துள்ளார்.

எனினும், தமக்கு எதிராக மத்துகம நீதிமன்றத்தினால் அவ்வாறான எந்தவொரு வழக்கோ அல்லது வெளிநாட்டு பயணத்தடையோ விதிக்கப்படவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிக்கையில், தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், உண்மையில் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரை விசாரணைகள் முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்ய குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவுக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னர் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததன் பின்னர் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் தரவுகள் தொடர்பான முறைமையில் ஏற்பட்ட பிழையை சரிசெய்து இன்று (11) வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...