நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,538 ஆகும்.
ஜூலை மாதத்தின் கடந்த 11 நாட்களில் கணிசமான அளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, கடந்த 12 நாட்களில் மாத்திரம் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதுவரை அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 35,823 ஆகக் குறிக்கப்ப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 10,657 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,756 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,560 நோயாளர்களும் என அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


