Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகியின் உடலை அடக்கம் செய்வதாக கர்நாடக அரசு அறிவிப்பு!

T

The Leader Desk

ஜூலை 12, 2026 • 5:06 AM

முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகியின் உடலை அடக்கம் செய்வதாக கர்நாடக அரசு அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
  • ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
  • நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ்.
எழுத்து அளவு:

கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இதனையடுத்து மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் ஜானகியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2013-ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்‘ விருது இவருக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்கு அது தாமதமாக கிடைப்பதாகக் கூறி, அதை ஏற்க மறுத்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டுடன் தான் பாடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து முழு ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்குத் திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...