Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; அமெரிக்கா திடீர் தாக்குதல்!

T

The Leader Desk

ஜூலை 12, 2026 • 4:43 AM

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; அமெரிக்கா திடீர் தாக்குதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்கள்: இதேவேளை, குறித்த கப்பல் மீதான தாக்குதலை அடுத்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் புதிய சுற்றுத் தாக்குதல்களை தற்போது ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • மறு அறிவித்தல் வரை குறித்த சர்வதேச கடல் வழிப்பாதை மூடப்பட்டிருக்கும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த சர்வதேச கடல் வழிப்பாதை மூடப்பட்டிருக்கும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சைப்ரஸ் நாட்டுக் கொடியுடனான வர்த்தகக் கப்பல் ஒன்று, அங்கீகரிக்கப்படாத கடல் பாதையினூடாக பயணித்த வேளையில் ஈரான் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து பிராந்தியத்தில் கடுமையான பதற்ற நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்தே ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவதற்கு ஈரான் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அடுத்தடுத்த தாக்குதல்கள்:

இதேவேளை, குறித்த கப்பல் மீதான தாக்குதலை அடுத்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் புதிய சுற்றுத் தாக்குதல்களை தற்போது ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ள ஈரான் தரப்பு, அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராகத் தாம் பதில் தாக்குதல்களைத் தொடுக்கவுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க இராணுவ முகாம்களையும் இலக்கு வைக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது.

மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்:

நடப்பு வாரத்தில் மாத்திரம், ஓமான் கடல் எல்லை ஊடாக அமெரிக்காவினால் பரிந்துரைக்கப்பட்ட பாதையில் பயணித்த மூன்று சிவிலியன் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவங்களைத் தொடர்ந்தே ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது மூன்றாவது சுற்றுத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்தே, அமெரிக்கா ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; அமெரிக்கா திடீர் தாக்குதல்! | Tamil Leader | We Lead the Nation