Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மின்சார சபையின் மறுசீரமைப்பு அமைச்சர் கஞ்சன விசேட அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 12, 2023 • 4:37 AM

மின்சார சபையின் மறுசீரமைப்பு அமைச்சர் கஞ்சன விசேட அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
  • இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பாதை வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், இறுதி வரைவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
  • தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகி, நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதே அவன் முதல் கட்டம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பாதை வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், இறுதி வரைவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் ஜய்கா நிறுவனம் ஆகியவை இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், இதன்போது வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நிதிக் கணக்காய்வு, மனிதவளக் கணக்காய்வு, சொத்துக் கணக்காய்வு மற்றும் சட்டமியற்றுதல் ஆகியவற்றுக்கு உரிய நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே இணங்கியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...