Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

T

The Leader Desk

ஜனவரி 16, 2023 • 5:17 AM

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையிலான கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இதன் போது, வலி வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில், பல்வேறு பகுதிகளிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது.
  • அந்த பகுதியில் இராணுவத்தின் சில முக்கிய தளங்கள் உள்ளதாக இராணுவத்தரப்பில் கூறப்பட்டது.
  • நாகர்கோயில் பகுதியில் வனவள திணைக்களம் எல்லையிட்ட காணிகள் வர்த்தமானியிடப்பட்டதாகவும், அவற்றை விடுவிப்பதாக வர்த்தமானியிட 5 வருடங்களின் முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இன்னும் நடைபெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.
எழுத்து அளவு:

தலைமையிலான கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்ணாயக்க, இராணுவத்தளபதி உள்ளிட்ட தரப்பும், நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன்,சாள்ஸ் நிர்மலநாதன், அங்கஜன் இராமநாதன், க.வி.விக்னேஸ்வரன், திலீபன்,காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன் போது, வலி வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில், பல்வேறு பகுதிகளிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என கூறப்பட்டது. பலாலி வீதியின் கிழக்கில் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அந்த பகுதியில் இராணுவத்தின் சில முக்கிய தளங்கள் உள்ளதாக இராணுவத்தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த பகுதியில் கட்டடங்கள் கட்டக்கூடாது என்றும் கூறப்பட்டது.

எனினும், விவசாய தேவைக்காக அவற்றை விடும்படி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அது பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், அந்த விடயம் முடிக்கப்பட்டது.

நாகர்கோயில் பகுதியில் வனவள திணைக்களம் எல்லையிட்ட காணிகள் வர்த்தமானியிடப்பட்டதாகவும், அவற்றை விடுவிப்பதாக வர்த்தமானியிட 5 வருடங்களின் முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இன்னும் நடைபெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.

அது பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கும்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு | Tamil Leader | We Lead the Nation