Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்திலும் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

T

The Leader Desk

ஜூலை 9, 2026 • 6:46 AM

யாழ்ப்பாணத்திலும் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.
  • மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை.
  • கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.
எழுத்து அளவு:

694 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், எந்தவித உயிரிழப்புகளும் பதிவு செய்யப்படவில்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்: 

கடந்த வருடத்தைப் போன்றே இந்த வருடமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த வருடமும், நடப்பு வருடத்தின் ஜூன் மாத இறுதிப்பகுதி வரையும் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 

தற்போது நாட்டின் தென்பகுதி மற்றும் ஏனைய பல மாகாணங்களில் டெங்கு நோயின் பரவல் மிகத் தீவிரமாகக் காணப்படுகின்றது. 

இந்த பின்னணியில், ஜூலை மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 65 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது ஒரு சடுதியான அதிகரிப்பாகும். 

மேல் மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று வருகின்றனர். அதேபோன்று, பலர் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளனர். 

"அவர்கள் விடுமுறைக்காக யாழ்ப்பாணத்திற்கு வரும்போது, பலர் டெங்கு நோய்த்தாக்கத்துடன் வந்து இங்குள்ள வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்" என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ்ப்பாணத்திலும் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு! | Tamil Leader | We Lead the Nation