மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசுவது தொடர்பான எச்சரிக்கை நிவேதனமொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நிவேதனமானது இன்று (09) முற்பகல் 11.00 மணி முதல் நாளை (10) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும் புட்டளம், அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், இது தொடர்பாகத் தம்மால் விடுக்கப்படும் ஏனைய அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழிலாளர்களிடமும் கடற்படைச் சமூகத்தினரிடமும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.


