அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆக உயர்வடைந்துள்ளது.
ஜூலை மாதத்தின் கடந்த 08 நாட்களில் மாத்திரம் 9,654 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (08) மாத்திரம் சுமார் 1,300 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள நோயாளர்களின் விபரம்:
-
கம்பஹா மாவட்டம் – 13,332 பேர்
-
கொழும்பு மாவட்டம் – 13,150 பேர்
-
மாத்தறை மாவட்டம் – 4,600 பேர்
-
களுத்துறை மாவட்டம் – 4,354 பேர்
தற்போது நாட்டில் உள்ள பல பிரதான வைத்தியசாலைகளின் கொள்ளளவு (Capacity) அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதனால், வைத்தியசாலைக் கட்டமைப்பில் கடுமையான நெருக்கடியும் கடும் நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


