Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 71 பேருக்கு டெங்கு: ஒரு வாரத்திற்கு விரிவுரைகள் ஒன்லைன் முறைக்கு மாற்றம்!

T

The Leader Desk

ஜூலை 9, 2026 • 5:49 AM

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 71 பேருக்கு டெங்கு: ஒரு வாரத்திற்கு விரிவுரைகள் ஒன்லைன் முறைக்கு மாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொற்றியுள்ளதாகவும், அவர்களில் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
  • டெங்கு நோய் ஏற்பட்டால் பூரண ஓய்வு அவசியமாகும் என்பதால், மாணவர்களின் நலன் கருதியே விரிவுரைகளை ஒன்லைன் ஊடாக நடத்தத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
  • டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் பல தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க மேலும் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

தொற்றியுள்ளதாகவும், அவர்களில் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, ஒரு வார காலத்திற்கு சில பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் ஒன்லைன் (Online) மற்றும் ஹைபிரிட் (Hybrid) முறைகளில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் பல தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க மேலும் கூறியுள்ளார்.

டெங்கு நோய் ஏற்பட்டால் பூரண ஓய்வு அவசியமாகும் என்பதால், மாணவர்களின் நலன் கருதியே விரிவுரைகளை ஒன்லைன் ஊடாக நடத்தத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உபவேந்தர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் எந்தவொரு வகையிலும் மூடப்படவில்லை என்பதை வலியுறுத்திய உபவேந்தர், பல்கலைக்கழகத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...