Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் ரூ 5,978 மில். நட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 4:10 AM

இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் ரூ 5,978 மில். நட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை என குறிப்பிட்டு செப்டம்பர் 21, 2020ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
  • வட்டி வீதத்துடன் 12 வருட கடன் மீள செலுத்தும் காலம், 40 வருட கடன் மீள செலுத்தும் காலம் எனும் அடிப்படையில் ஜப்பான் வழங்கும் கடன் மூலம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.
  • சரியான ஆய்வுகள் இன்றி, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தினால், அதுவரைக்கும் செலவழிக்கப்பட்ட 5978 மில்லியன் ரூபாய் பணம் அநாவசிய செலவு என கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த பலனை அடைய முடியவில்லை என குறிப்பிட்டு செப்டம்பர் 21, 2020ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட கடிதத்தை ஆதாரமாகக்  கொண்டு இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

0.1 வட்டி வீதத்துடன் 12 வருட கடன் மீள செலுத்தும் காலம், 40 வருட கடன் மீள செலுத்தும் காலம் எனும் அடிப்படையில் ஜப்பான் வழங்கும் கடன் மூலம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.

சரியான ஆய்வுகள் இன்றி, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தினால், அதுவரைக்கும் செலவழிக்கப்பட்ட 5978 மில்லியன் ரூபாய் பணம் அநாவசிய செலவு என கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தொகைக்கு மேலதிகமாக, திட்டத்தின் ஆலோசனை நிறுவனம் கோருகின்ற 5,169 மில்லியன் ரூபாய் தொகையை செலுத்த வேண்டி ஏற்படுமாயின், அந்த நட்டத்தையும்  ஏற்கவேண்டி ஏற்படும்.

இழப்பை ஈடு செய்வதாகத் தெரிவித்து, மின் கட்டணத்தை அதிகரித்து, மக்கள் மீது மேலதிக சுமையை ஏற்றுவதற்கு முன்னர், எந்த விசாரணையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களால் விரயம் செய்யப்பட்ட பெரும் தொகையினை மீள பெறுவதற்கு எந்தவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

 

Join our WhatsApp group

Screenshot 2022 12 08 at 10.03.57 AM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...