Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஐ.தே.கவிடமிருந்து மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு வாழ்த்துகள்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2026 • 3:13 PM

ஐ.தே.கவிடமிருந்து மொட்டுவின் அநுராதபுர பேரணிக்கு வாழ்த்துகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமிற்கு எழுத்துப்பூர்வமாக உத்தியோகபூர்வ செய்தியனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.
  • நாமல் ராஜபக்ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் மட்டுமன்றி, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என ஐக்கிய தேசியக் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 04) அறிக்கையொன்றை வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தது.
  • நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட சில நிமிடங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையிலும், செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள அனுராதபுர பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது முழுமையான ஆதரவையும் சூடான வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமிற்கு எழுத்துப்பூர்வமாக உத்தியோகபூர்வ செய்தியனுப்பி இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஏற்பாடு செய்திருந்த அனுராதபுர மக்கள் பேரணி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலேயே திட்டமிடப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இந்த கைதானது அனுராதபுர பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனத் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையால் சோர்ந்துபோகாமல், ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனுராதபுரத்தில் நடைபெறும் மக்கள் பேரணியை வெற்றியடையச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சூடான வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் கைதானது அரசியல் பழிவாங்கல் மட்டுமன்றி, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என ஐக்கிய தேசியக் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 04) அறிக்கையொன்றை வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட சில நிமிடங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையிலும், செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவிருந்த பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களைப் போலவே மொட்டுவின் தலைவர்களுக்கும் நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு ஜனநாயக உரிமை உண்டு என்றும், அடக்குமுறைகள் மூலம் மக்கள் ஈர்ப்பைத் தடுக்க முடியாது என்றும் ஐ.தே.க ஊடகப் பிரிவு வெளியிட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ருந்தது.

சட்ட நடவடிக்கைகளும் மொட்டுவின் நிலைப்பாடும்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) நாமல் ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தக் கைது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என்றும், திட்டமிட்டபடி அனுராதபுர பேரணி செப்டம்பர் 12ஆம் திகதி எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்றும் முன்னர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சியின் புதிய அரசியல் சீரமைப்பு

தேசிய மட்டத்திலான அரசியல் செயல்பாடுகளில் ஆளும் கட்சி நாடு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் சக்திகளுக்கு இடையே இவ்வாறானதொரு ஒத்துழைப்பு கட்டியெழுப்பப்படுவது அரசியல் அவதானிகளின் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தற்போதைய அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே மேடையை நோக்கி நெருங்கும் போக்கை இது காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி), ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் இணையவதில்லை என்பதில் கடுமையான முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சியின் உள்வீட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...