Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இ.போ.சவுக்கு 800 பஸ்கள்; மூன்று மாகாணங்களுக்கு மெற்றோ சேவை விஸ்தரிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2026 • 4:11 AM

இ.போ.சவுக்கு 800 பஸ்கள்; மூன்று மாகாணங்களுக்கு  மெற்றோ சேவை விஸ்தரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்குமான வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை அரச போக்குவரத்துக் கழகத்தின் (இ.ග.ම) மற்றும் மெற்றோ பஸ் சேவையின் செயல்பாடுகளைக் கணிசமான அளவில் விரிவாக்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • நேற்று (07) உத்தியோகபூர்வமாகச் செயல்பாடுகளைத் தொடங்கிய கடுவெல மெற்றோ டிப்போ வளாகத்தை மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை உறுதிப்படுத்தினார்.
  • இதன் முதலாவது டிப்போ கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி பத்தரமுல்ல, தலங்கம பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
  • முதற்கட்டத்தின் கீழ் தலங்கம, கடுவெல, ஏகல மற்றும் ரத்மலானை ஆகிய பிரதான போக்குவரத்து மையங்களை இலக்க்காகக் கொண்டு 04 மெற்றோ டிப்போக்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பயணிகள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்குமான வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை அரச போக்குவரத்துக் கழகத்தின் (இ.ග.ම) மற்றும் மெற்றோ பஸ் சேவையின் செயல்பாடுகளைக் கணிசமான அளவில் விரிவாக்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் குளிரூட்டப்பட்ட (A/C) 600 புதிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கும், இலங்கை அரச போக்குவரத்துக் கழகத்தின் உள்நாட்டு நிதி மூலமாக மேலும் 200 பஸ்களைச் சேவையில் இணைத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று (07) உத்தியோகபூர்வமாகச் செயல்பாடுகளைத் தொடங்கிய கடுவெல மெற்றோ டிப்போ வளாகத்தை மக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை உறுதிப்படுத்தினார்.

இரண்டாவது மெற்றோ டிப்போ மற்றும் செயல்பாடுகள் விரிவாக்கம்

நகரப் பஸ் சேவை அமைப்பை விரிவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இரண்டாவது மெற்றோ பஸ் டிப்போ வளாகம் இதுவாகும். இதன் முதலாவது டிப்போ கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி பத்தரமுல்ல, தலங்கம பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டத்தின் கீழ் தலங்கம, கடுவெல, ஏகல மற்றும் ரத்மலானை ஆகிய பிரதான போக்குவரத்து மையங்களை இலக்க்காகக் கொண்டு 04 மெற்றோ டிப்போக்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மாக்கும்புரவில் இருந்து மஹரகம ஊடாக கடுவெல வரை (பாதை இலக்கம் 01) நவீன வசதிகளைக் கொண்ட 15 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதுடன், இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் மொத்த மெற்றோ பஸ்களின் எண்ணிக்கையை 122ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, மேலும் 50 பஸ்களைப் புதிதாக இணைத்துக் கொள்வதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மெற்றோ பஸ்களின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேல் மாகாணத்திற்கு அப்பாலும் தனியார் துறையின் பங்களிப்பும்

தற்போது மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்தச் சேவையானது, எதிர்காலத்தில் கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதான நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டது. மேலும், மெற்றோ நிறுவனத்துடன் குறிப்பிட்ட ஒப்பந்தக் கட்டமைப்பிற்குட்பட்டு, தரம் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக இச்சேவையை வழங்குவதற்குத் தனியார் துறைக்கும் திறந்த வாய்ப்பை வழங்க அரசு எதிர்பார்க்கிறது.

இத்திட்டமானது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, 'Clean Sri Lanka' செயலகம், இலங்கை அரச போக்குவரத்துக் கழகம் மற்றும் 'லங்கா மெற்றோ ட்ரான்சிட்' (Lanka Metro Transit) தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் ஒரு விரிவான வேலைத்திட்டமாகும்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து

நகரப் போக்குவரத்தில் தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பஸ் நிறுத்தங்களை நவீனமயமாக்கல், ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவு முறைமைகள் (Integrated Payment Systems), வாகனப் பூங்காக்கள் (Park & Ride) மற்றும் புகையிரதம் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்துச் சேவைகளுடன் நேர அட்டவணைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 'நகரப் பொதுப் போக்குவரத்து சீர்திருத்தங்களுக்கு' (Public Transport Reforms) அமைவாக, இலங்கையிலும் தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, நம்பகமான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...