அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதியொருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதியொருவரும் திடீர் நோய் நிலைமை காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்புசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் "கடுவெல்லேகம சுரேஷ்" என்பவரும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 பேர் சிறைச்சாலைகள் விசேட உத்திநோக்கு பிரிவின் அதிகாரிகள் ஆவர்.
இ மோதலில் 17 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த சுமார் 100 பேரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


