மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இவ்வருடத்தில் இதுவரையில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும் என அப்பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,450 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், எதிர்வரும் சில நாட்களிலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


