Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

T

The Leader Desk

ஜூலை 7, 2026 • 3:08 AM

நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொண்டு வருவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
  • இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • அத்துடன் மேலும் 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எழுத்து அளவு:

கொண்டு வருவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவ்விடத்தில் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பெண் கைதிகள் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமைகளை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மேலும் 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 5 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவொன்றுக்கும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவொன்றுக்கும் இடையில் வன்முறை வெடித்திருந்தது.

இதன்போது இருதரப்பு கைதிகளும் காயமடைந்ததுடன், 2 கைதிகள் உயிரிழந்தும் 34 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (06) முற்பகல் மீண்டும் நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற போது, கைதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இம்மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் (CCD) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விபரங்களை அறிக்கை செய்த பின்னர், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, தும்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிற்ற ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய நேற்று கூடிய அமைச்சரவையினால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் இதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

இக்குழுவினால் இச்சம்பவம் குறித்த அனைத்து விபரங்களும் விரிவாக விசாரிக்கப்பட்டு, அதற்கான காரணங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இன்று (07) நடத்தப்படவுள்ளன.

அத்துடன் உயிரிழந்த கைதிகளை அடையாளம் காண்பதற்கான சந்தர்ப்பம் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...