(Online) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணிநேரங்களிலேயே, வங்கதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் 'அவாமி லீக்' (Awami League) நாடாளுமன்ற உறுப்பினருமான சாகிப் அல் ஹசனின் (Shakib Al Hasan) வீட்டிற்குப் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (05) இரவு 8:45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டைச் சேதப்படுத்திய சமூக விரோதிகள் அங்குள்ள சொத்துக்களுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அவாமி லீக்கின் அறிக்கை மற்றும் ஷேக் ஹசீனாவின் கருத்து:
இத்தாக்குதல் குறித்து அவாமி லීக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"வீடுகளுக்குத் தீ வைத்தல்: அவாமி லீக் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டதற்குச் செலுத்திய விலை இதுவாகும். புதிய பாசிசம் வங்கதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது"
எனக் குறிப்பிட்டுள்ளது.
இணையவழியில் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டில் ஜனநாயகத்தை மீளக் கொண்டுவரும் முயற்சியாகக் கைது செய்யப்படுவதையோ அல்லது மரணத்தையோ எதிர்கொள்ளத் தயார் நிலையில் வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்குத் திரும்ப உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


