Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 6, 2026 • 6:01 AM

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில்.
எழுத்து அளவு:

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (06) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மேற்கூறிய கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

எனவே, இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...