Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

T

The Leader Desk

ஜூலை 6, 2026 • 3:35 PM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
  • இதன்படி, 7 சிறைச்சாலை அதிகாரிகளும் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • கொழும்புக்கு மாற்றம்: படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்திலிருந்த 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை அங்கு மீண்டும் கடுமையான பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 7 சிறைச்சாலை அதிகாரிகளும் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த அதிகாரிகளில் சிறைச்சாலை ஜெயிலர் ஒருவர், சிரேஷ்ட கட்டுப்பாட்டாளர் ஒருவர் மற்றும் சிறைச்சாலை காவலர்கள் (Guards) சிலரும் உள்ளடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களும் சொத்துச் சேதங்களும்

இதேவேளை, 23 சிறைச்சாலை அதிகாரிகளும் 54 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையினுள் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா கட்டமைப்புகள் மற்றும் உடல் வருடேந்தி இயந்திரம் (Body Scanner) என்பன கைதிகளினால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு வினாசம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

  • கொழும்புக்கு மாற்றம்: படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான கட்டத்திலிருந்த 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • கைதிகள் இடமாற்றம்: சிறைச்சாலையின் செயற்பாடுகளை முடக்குவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், மோதலுக்குக் காரணமான கைதிகள் குழுவொன்றை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

தற்போது நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தினால் அரசாங்கம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இது இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே தவிர, சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை அங்கு மீண்டும் கடுமையான பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள (Remand) கைதிகள் குழுவொன்றிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட (Convicted) கைதிகள் குழுவொன்றிற்கும் இடையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் இன்று (06) தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கைதிகள் சிலரை போகம்பர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் கைதிகள் மற்றும் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகிய இரு தரப்பினருக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.

நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி!

நேற்று (05) ஏற்பட்ட மோதல் நிலைமை தணிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில், இன்று முற்பகல் 10.00 மணியளவில் கைதிகள் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் ஊடாக வெளியே தப்பியோட முயன்றதைத் தொடர்ந்தே இந்த மிக மோசமான அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை

சிறைச்சாலையினுள் இருந்து அடுக்கடுக்காக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக கள ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்துவதுடன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

  • உயிரிழப்புகளும் வைத்தியசாலை அனுமதியும்: உயிரிழந்த 25 பேரில் சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் உள்ளடங்குவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், காயமடைந்த 100 க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர். கைதிகள் 10 பேருக்கு இதுவரை அவசர சத்திரசிகிச்சைகள் (Surgeries) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே தெரிவித்துள்ளார்.

  • 4 பாதுகாப்புப் படைகள் களம் இறக்கம்: சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவும் மிக உக்கிரமான பதற்றநிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF), இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட நான்கு பாதுகாப்புப் பிரிவினர் தற்போது அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் குற்றச்சாட்டுகள்

இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையில் நிலவும் வளப் பற்றாக்குறையே இதற்கு நேரடிக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

  • கைதிகள் இடமாற்றம்: நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2,417 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பின்னணியில், நிலவும் பாரிய ஆபத்தைக் கருத்திற்கொண்டு கைதிகளை உடனடியாக ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

  • அதிகாரிகள் பற்றாக்குறை: ஒட்டுமொத்த கைதிகளையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு (1/4) அதிகாரிகளே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை இந்த நிர்வாக முடக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.

  • எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு: இந்த சோக ஜனகமான சூழ்நிலையானது தற்போதைய சிறைச்சாலை நிர்வாகத்தின் சீர்குலைவையும் திறமையின்மையையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் சான்றாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி அவர்கள் முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தபோது சிறைச்சாலை மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்த 25 மரணங்களுக்கும் தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும், இது குறித்து வெளிப்படைத்தன்மையுடனான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு! | Tamil Leader | We Lead the Nation