Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்; ஆகக்குறைந்த கட்டணம் 34 ரூபாவாக அதிகரிப்பு!

T

The Leader Desk

ஜூலை 6, 2026 • 4:07 AM

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்; ஆகக்குறைந்த கட்டணம் 34 ரூபாவாக அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (06) முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பஸ் கட்டணங்களை 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
  • இதற்கமைய, இதுவரை காலம் 30 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இணையாக சொகுசு பஸ் கட்டணங்களும், அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான (Expressway) பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • அமுலுக்கு வரும் புதிய பஸ் கட்டண திருத்தம் குறித்து பஸ் ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை புதிய கட்டணங்களுக்கு அமைய தரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இன்று (06) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பஸ் கட்டணங்களை 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கமைய, இதுவரை காலம் 30 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு இணையாக சொகுசு பஸ்  கட்டணங்களும், அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான (Expressway) பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அமுலுக்கு வரும் புதிய பஸ் கட்டண திருத்தம் குறித்து பஸ் ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை புதிய கட்டணங்களுக்கு அமைய தரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நாடளாவிய ரீதியிலான சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை புதிய கட்டணங்களுக்கு அமைய தரப்படுத்துவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் வரை செல்லலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்; ஆகக்குறைந்த கட்டணம் 34 ரூபாவாக அதிகரிப்பு! | Tamil Leader | We Lead the Nation