Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை நடத்த குழு நியமனம்!

T

The Leader Desk

ஜூலை 6, 2026 • 3:47 AM

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணை நடத்த குழு நியமனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (05) பிற்பகல் 1.00 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
  • கைதிகளின் நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடக பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (05) பிற்பகல் 1.00 மணியளவில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள (Remand) கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதிலிருந்து தவறி விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளின் நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் பலர் சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடி, கைதிகள் குறித்த தகவல்களை அதிகாரிகள் தமக்கு வழங்கவில்லை எனக் கூறி பதற்றமாக நடந்துகொண்டனர். எவ்வாறாயினும், பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதுடன், உறவினர்கள் சிலரை வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடக பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க மேலும் கருத்து வெளியிடுகையில்:

"நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்ற பின்னர் பல்லன்சேன முகாமுக்கு (Pallansena Camp) மாற்றப்பட்டுள்ளனர். இந்த நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறைச்சாலையின் உட்புற நிலைமை சிறைச்சாலை அதிகாரிகளினால் சுமுக நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், வெளிப்புற பாதுகாப்புக்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது கைதிகளுக்கு இடையிலான மோதல் மட்டுமே தவிர, இதில் அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறியத்தருகிறோம். கைதிகளின் உறவினர்கள் இந்த நேரத்தில் வீண் பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் ஒத்துழைப்புடன் உள்ளக நிலைமையை எம்மால் சுமுகமாக்க முடிந்தது. கைதிகள் சில கோரிக்கைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளனர். அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் கைதிகளுக்கு உறுதியளித்துள்ளார்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...