மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், மீன் அறுவடை சுமார் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதுடன், இதன் காரணமாக பல பகுதிகளில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பேலியகொட மத்திய மீன் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிரி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
மீன் தட்டுப்பாட்டுடன் சேர்ந்து மீன் விலைகளும் மேலும் உயர்வடைந்துள்ளதால், மொத்தக் கொள்வனவுக்காகப் பேலியகொட மத்திய மீன் சந்தைக்குச் சில்லறை வியாபாரிகள் வருகை தருவதும் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி, மன்னார், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, பேருவளை உள்ளிட்ட கடற்பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான வானிலை காரணமாக, ஆழ்கடலுக்குச் செல்வது தற்போது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


