Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2026 • 4:55 AM

தரம் 5 புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வகையான மேலதிக வகுப்புகள் (Tuition classes), பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை இன்று (05) நள்ளிரவு முதல் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
  • பரீட்சை வினாத்தாள்களிலுள்ள வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ தெரிவிக்கும் சுவரொட்டிகள் (Posters), பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலத்திரனியல்/அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களைத் தம்வசம் வைத்திருத்தல்.
  • பரீட்சை திகதி மற்றும் விசேட கலந்துரையாடல்: பரீட்சை திகதி: 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
எழுத்து அளவு:

வகையான மேலதிக வகுப்புகள் (Tuition classes), பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை இன்று (05) நள்ளிரவு முதல் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அமலில் இருக்கும்.

விதிக்கப்பட்டுள்ள தடைகள்:

  • பரீட்சைக்கான மாதிரி வினாக்களை உள்ளடக்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது விளம்பரம் செய்தல்.

  • பரீட்சை வினாத்தாள்களிலுள்ள வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ தெரிவிக்கும் சுவரொட்டிகள் (Posters), பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலத்திரனியல்/அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்தல் அல்லது அத்தகைய பொருட்களைத் தம்வசம் வைத்திருத்தல்.

பரீட்சை திகதி மற்றும் விசேட கலந்துரையாடல்:

  • பரீட்சை திகதி: 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

  • விசேட கலந்துரையாடல்: நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பாக வானிலை அவதானிப்பு மையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

நிலவும் மழை உடனான வானிலைக்கு மத்தியில் பரீட்சை நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படும் என வானிலை அவதானிப்பு மையத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...