Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி: மேலும் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 5, 2026 • 4:11 AM

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி: மேலும் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி வி.
  • மழைக்கவசம் (Raincoat) போலத் தோற்றமளிக்கும் இளஞ்சிவப்பு நிற ஆடையின் ஒரு பகுதியால் மூடப்பட்டிருந்த எலும்புக்கூடொன்று ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது.
  • பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நாளில் அந்த உடலின் எஞ்சிய பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகச் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

எலும்புக்கூடுகளில் 481 எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன

  • குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மைகள் மற்றும் 144 பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விசாரணையாளர்களின் பொறுப்பில்

  • இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் பத்து நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், தொல்பொருள் மற்றும் தடயவியல் விசாரணையாளர்கள் மேலும் நான்கு மனித எலும்புக்கூடுகளைப் புதிதாகக் கண்டெடுத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஆகஸ்ட் 04 ஆம் திகதி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்:

    2025 மே 15 ஆம் திகதி முதல் ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக 97 நாட்கள் செம்மணி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், குழந்தைகள் உட்பட வெளிப்படுத்தப்பட்ட 483 மனித எலும்புக்கூடுகளில் 481 எலும்புக்கூடுகள் இதுவரை தோண்டி எடுக்கப்பட்டு முடிவடைந்துள்ளன.

    மழைக்கவசம் (Raincoat) போலத் தோற்றமளிக்கும் இளஞ்சிவப்பு நிற ஆடையின் ஒரு பகுதியால் மூடப்பட்டிருந்த எலும்புக்கூடொன்று ஜூலை 23 ஆம் திகதி வியாழக்கிழமை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. பணிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நாளில் அந்த உடலின் எஞ்சிய பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகச் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.

    யாழ்ப்பாணம் நீதவான் செல்வாநாயகம் லெனின்குமாரின் மேற்பார்வையின் கீழ் மனிதப் புதைகுழி மிகவும் அவதானமாக அகழப்பட்டு வருகின்றது. தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் அடங்கிய குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை தோண்டி எடுத்த மனித எலும்புகளுக்கு மத்தியில் ஒரே குவியலாக ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்பட்டிருந்த 36 எலும்புப் பொதிகளையும் (bone bundles) கண்டறிந்துள்ளனர்.

    செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 144 பயன்பாட்டுப் பொருட்களில் (artifacts):

    • குழந்தைகளின் பால் போத்தல்கள்

    • பொம்மை உட்படச் சமையல்/விளையாட்டுப் பொருட்கள்

    • சிறுவர்களின் காலணிகள்

    • பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்கள்

    என்பனவும் அடங்குகின்றன.

    C 03

    C 02

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...