Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட இளம் தமிழ் ஊடகவியலாளரின் நினைவஞ்சலியில் NPP அரசாங்கத்திற்கும் கண்டனம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2026 • 5:12 AM

படுகொலை செய்யப்பட்ட இளம் தமிழ் ஊடகவியலாளரின் நினைவஞ்சலியில் NPP அரசாங்கத்திற்கும் கண்டனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது 22ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்ஷன் என்ற ஊடகவியலாளரை நினைவுகூரும் நிகழ்வு 2026 ஆகஸ்ட் 1 சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமைப்பில் (Jaffna Press Club) அதன் தலைவர் கே.
  • சகாதேவன் நிலக்ஷனின் 19 ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்ட யாழ்.
  • அவரது 19 ஆவது நினைவேந்தலில் யாழ்ப்பாண ஊடக அமைப்பின் தலைவர் கே.
  • செல்வகுமார் சுட்டிக்காட்டுகையில், கடந்தகால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதைத் தவிர்த்து வருவதாகக் குற்றம் சாட்டினார்: "நம்மோடு சேர்ந்து பணியாற்றிய 39 ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது?
எழுத்து அளவு:

சம்பவங்களை மறந்து ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என வலியுறுத்தல்

  • வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது இன்னமும் தாமதமாவதாக யாழ்ப்பாணத்தில் குரல்

  • வடக்கில் வீதியில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி கிடைக்கப் பெறாத இளம் தமிழ் ஊடகவியலாளரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

    தனது 22ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்ஷன் என்ற ஊடகவியலாளரை நினைவுகூரும் நிகழ்வு 2026 ஆகஸ்ட் 1 சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஊடக அமைப்பில் (Jaffna Press Club) அதன் தலைவர் கே. செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

    முதலாவது ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், 2007 ஆகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 5:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால், யாழ்ப்பாணம் மேற்கு கொக்குவிலில் உள்ள புகையிரத நிலைய வீதியில் அமைந்திருந்த சகாதேவன் நிலக்ஷனின் வீட்டிற்கு முன்னால் வைத்து அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

    அச்சமடைந்திருந்த அவரது நண்பரொருவரைப் பயன்படுத்தி, நிலக்ஷனை வீட்டிற்கு வெளியே வரவழைத்தே குற்றவாளிகள் இக்கொலையைச் செய்திருந்தனர்.

    சகாதேவன் நிலக்ஷனின் 19 ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்ட யாழ். ஊடகவியலாளர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நிலக்ஷன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஊடகவியலைப் பயின்று வந்த ஒரு பகுதிநேர ஊடகவியலாளராவார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட பிரபலமான மாணவர் வெளியீடான 'சாரளம்' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    அவரது 19 ஆவது நினைவேந்தலில் யாழ்ப்பாண ஊடக அமைப்பின் தலைவர் கே. செல்வகுமார் சுட்டிக்காட்டுகையில், கடந்தகால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதைத் தவிர்த்து வருவதாகக் குற்றம் சாட்டினார்:

    "நம்மோடு சேர்ந்து பணியாற்றிய 39 ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது? இந்த அரசாங்கமும் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறதா? இந்த அநுரவின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதி வழங்கத் தேவையான விசாரணைகளைச் செய்வதாகக் கூறியது. இப்போது ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி எதுவுமே பேசாமல் இருக்கிறார்கள்.

    முந்தைய அரசாங்கங்களைப் போலத் தான் இந்த அரசாங்கமும் செயல்படுகிறது. ஒரு ஜனநாயக நாடு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை 'அப்படியே நடந்துவிட்டது' என்று கைவிட்டுச் சென்றால், எதிர்காலத்தில் அந்த நாடு ஜனநாயக நாடாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்தச் சம்பவங்களுக்கு நீதி கிடைக்கும் போது தான் அந்த நாடு பொருளாதார ரீதியாகவும் நல்ல வளர்ச்சியை எட்டும்."

    JDS என அறியப்படும் 'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள, படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் ஊடகவியலாளர்களாவர்.

    நிலக்ஷன் படுகொலை உட்பட வடக்கு-கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்து முறைப்படியான, நடுநிலையான விசாரணைகளை நடத்துவதற்கு இதுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    jaffna media

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...