அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவது அரசாங்கத்தின் முதன்மையான பொருளாதார இலக்காகும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 பிரதான வெளிநாட்டுச் சந்தைகளில் பணியாற்றுகின்ற வர்த்தக அதிகாரிக மத்தியில் உரையாற்றிய அமைச்சர், சர்வதேசச் சந்தையில் இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நாமத்தை (Brand Sri Lanka) ஊக்குவிப்பதற்கான முதன்மைப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது எனச் சுட்டிக்காட்டினார். தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்திற்கு (NEDP) அமைவாகப் பணியாற்றி, சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி ஊக்கம் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அளவிடக்கூடிய முடிவுகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
'இலங்கை எக்ஸ்போ 2027' மற்றும் வெளிநாட்டு முதலீடுகள்
அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ள 'இலங்கை எக்ஸ்போ 2027' (Sri Lanka Expo 2027) சர்வதேசக் கண்காட்சிக்காக அதிக சர்வதேசப் பங்களிப்பைப் பெறுவதன் அவசியத்தையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கை தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான புதிய சந்தைப் பிரவேசங்களைப் பெறுதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் (FDI) ஈர்த்தல், சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாடுகளில் திறனுள்ள வேலைவாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி) கில்மா தஹநாயக்க (Gilma Dahanayake), பதில் வர்த்தக பணிப்பாளர் நாயகம் சோமசேன மஹதியுல்வெவ (Somasena Mahadiulwewa) உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
செயற்பாட்டு முன்னேற்ற மறுஆய்வும் எதிர்கால நடவடிக்கைகளும்
இக்கலந்துரையாடலின் போது, வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் ஒவ்வொரு வர்த்தக அதிகாரியும் தாம் சார்ந்த நாடுகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்ட வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தனர். மேலும், ஆண்டின் எஞ்சிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேசச் சந்தையில் இலங்கையின் வர்த்தகப் பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்குகளை அடைவதன் முன்னேற்றத்தைத் தவறாமல் கண்காணிப்பதற்கும் எதிர்காலத்திலும் இவ்வாறான முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.


