Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்!

T

The Leader Desk

செப்டம்பர் 2, 2026 • 4:02 AM

பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீண்ட நாட்களாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
  • மில்டன் பெரேராவின் இசைப் பரம்பரையிலிருந்து வந்து திரையுலகை வென்ற பிரியங்கர பெரேரா தனது 64 ஆவது வயதில் காலமானார்.
  • அவரது பௌதிக உடல் இன்று (செப்டம்பர் 02) கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், இறுதிச்சடங்குகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது மனைவியும் சிரேஷ்ட நடிகையுமான தில்ஹானி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
  • இவர் பாடகர் சலக்க சாமுபதியின் மூத்த சகோதரருமாவார்.
எழுத்து அளவு:
  • நீண்ட நாட்களாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

  • மில்டன் பெரேராவின் இசைப் பரம்பரையிலிருந்து வந்து திரையுலகை வென்ற பிரியங்கர பெரேரா தனது 64 ஆவது வயதில் காலமானார்.

இலங்கை இசை மற்றும் திரைப்படத் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வந்த சிரேஷ்ட பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 01) இரவு அவர் தனது 64 ஆவது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக நோயுற்றிருந்த அவரது மறைவை குடும்ப உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது பௌதிக உடல் இன்று (செப்டம்பர் 02) கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், இறுதிச்சடங்குகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது மனைவியும் சிரேஷ்ட நடிகையுமான தில்ஹானி ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

தந்தையின் வழியில் வந்த இசைப் பயணம்

பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மூத்த மகனான பிரியங்கர பெரேரா, தனது தந்தையின் தனித்துவமான பாடும் பாணியையும் இனிமையான குரலையும் உரிமையாக்கிக் கொண்டு இசைத்துறையில் கால் பதித்தார். இவர் பாடகர் சலக்க சாமுபதியின் மூத்த சகோதரருமாவார். வளரும் இளம் பாடகரான தில்மின் பெரேரா, பிரியங்கர பெரேராவின் மகனாவார்.

குறிப்பாக 80 மற்றும் 90 களின் கேசட் கலாச்சாரத்தில் பெரும் புகழ்பெற்ற அவர், தந்தையின் பாடல்கள் மட்டுமன்றித் தனக்கே உரிய பல பாடல்களையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தார். “ரன் பொகுணென்”, “சுபுன் சந்தக்”, “சந்துன் கஸே சமன் வெலக்”, “சிகுருலியா”, “அகாத சாகரயே”, “சிஹின தெவ்துவே”, “பிஸ்ஸு விகாரே” மற்றும் “பெர ஆத்மயக எக்க ராத்ரியக்க” போன்ற பாடல்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

வெள்ளித்திரையையும் சின்னத்திரையையும் அலங்கரித்த நடிப்பு

பாடகராக மட்டும் நின்றுவிடாமல் திரைப்பட மற்றும் தந்தி நாடக நடிகராகவும் பிரியங்கர பெரேரா ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 'சுரங்ஙன', 'சீதல கினி கந்து', 'மதுரி' மற்றும் 'நின்ஜா ஸ்ரீலங்கா' உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

மேலும் 'கமன', 'அரவிந்த ஹா இந்து' போன்ற புகழ்பெற்ற தந்தி நாடகங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டன. பாட்டு, நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்திய பிரியங்கர பெரேராவின் மறைவு, நாட்டின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...