Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

கிழக்கின் காணி விவகார விசேட குழுவை மீளப்பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

T

The Leader Desk

ஜூலை 2, 2026 • 3:44 AM

கிழக்கின் காணி விவகார விசேட குழுவை மீளப்பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வகையில், ஏனைய மாகாணங்களில் இல்லாத விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு சிவில் அமைப்பொன்று பலத்த கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • இந்த பாரபட்சமான நடவடிக்கை பலத்த கவலைக்குரிய விடயமாகும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இஸ்மாயில், அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் மூலம் அனைத்து நபர்களுக்கும் சட்டத்தின் முன்னால் சமமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • "அரசியலமைப்பின் 12(2)ஆம் உறுப்புரையானது இனம், மதம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதைத் தடை செய்கிறது.
எழுத்து அளவு:

வகையில், ஏனைய மாகாணங்களில் இல்லாத விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு சிவில் அமைப்பொன்று பலத்த கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்நடவடிக்கையை உடனடியாக அமுல்படுத்துவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

"கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாத்தல்" எனும் பெயரில், தென் மாகாண முன்னாள் காணி ஆணையாளரும் தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பள்ளியகுருகேவின் தலைமையில், அதுசார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு கடந்த 2026 ஜூன் 22ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளில் தலையிடுவதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் விசேட பிரிவொன்றை உடனடியாக நிறுவுவதற்கும், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத காணி அபகரிப்புகள் மற்றும் நில நிரப்பல்களை தடுப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரத்தை வழங்குவதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத காணி அபகரிப்பு, அங்கீகரிக்கப்படாத காணி ஆக்கிரமிப்பு மற்றும் கடற்கரையோரங்களில் இடம்பெறும் சட்டவிரோத கட்டுமானங்கள் என்பன மாகாணத்தைப் பாதிக்கும் பிரதான பிரச்சினைகளாக ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள கிழக்கை தளமாகக் கொண்ட 'யுக்தி கேந்திரய' (நீதி மையம்) அமைப்பு, இத்தீர்மானத்தை எட்டுவதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் பாரதூரமான பிரச்சினைகள் என்பதைத் தமது அமைப்பு நிராகரிக்கவில்லை என்றும், எனினும் இவை கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினைகள் அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

'யுக்தி கேந்திரய' அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சாஃபி எச். இஸ்மாயிலின் கையொப்பத்துடன் கடந்த ஜூன் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில், நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இவ்வாறானதொரு விசேட குழுவை நியமிப்பது பாரபட்சமான செயலாகும் என மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"இவை இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பதிவாகியுள்ள, நாடு தழுவிய ரீதியில் காணப்படும் ஒரு நிகழ்பாடாகும் (phenomenon). தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் பரவலாக பதிவாகியுள்ளன. எனினும், அந்த மாகாணங்கள் எதற்கும் இவ்வாறான விசேட குழுக்கள் நியமிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கை பலத்த கவலைக்குரிய விடயமாகும்" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணமானது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சகவாழ்வுடன் வாழும் ஒரு பிராந்தியம் என்பதை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ள 'யுக்தி கேந்திரய' அமைப்பு, குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்கும் வகையில், காணிகளை இழந்துபோன ஒரு வேதனைமிக்க யுத்தத்திற்கு பின்னரான வரலாற்றை அவர்கள் சுமந்து நிற்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இவ்வாறானதொரு கட்டமைப்பு நிறுவப்படாத நிலையில், இந்த மாகாணத்திற்கு மாத்திரம் விசேடமாக அமுல்படுத்தப்படும் பொறிமுறையொன்றை நிறுவுவது, குறித்த சமூகங்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும் என ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ள அவ்வமைப்பின் தலைவர் சட்டத்தரணி சாஃபி எச். இஸ்மாயில், அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் மூலம் அனைத்து நபர்களுக்கும் சட்டத்தின் முன்னால் சமமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் ஒரு பிராந்தியத்திற்கு மாத்திரம் அமுலாகும் வகையில், ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பொறிமுறையொன்றை செயற்படுத்துவது இந்த அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சுட்டிக்காட்டியுள்ள நீதி மையத்தின் தலைவர், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சட்டப் பொறிமுறைகள் ஏற்கனவே போதுமான அளவில் நடைமுறையில் உள்ளதாக நினைவூட்டியுள்ளார்.

"அரசியலமைப்பின் 12(2)ஆம் உறுப்புரையானது இனம், மதம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதைத் தடை செய்கிறது. சிறுபான்மை சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிக்கு மாத்திரம் அமுலாகும் வகையில், ஒரு மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையை செயற்படுத்துவது இந்த அடிப்படை உரிமைகளுக்கு முரணானது. அரசியலமைப்பிற்கு இணங்க சரியான அணுகுமுறை என்னவென்றால், ஒன்பது மாகாணங்களிலும் சட்டத்தை சமமாகவும் பாரபட்சமின்றியும் அமுல்படுத்துவதாகும். மிக முக்கியமாக, இனம் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அனைத்து விதிகளும் ஏற்கனவே சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளன. 1979ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அரச காணிகள் (சந்தகத்தை மீளப்பெறுதல்) சட்டமானது, முறையான சட்டரீதியான செயல்முறையின் மூலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரச காணிகளை மீளப்பெறுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு தெளிவான மற்றும் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது" என சட்டத்தரணி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அரச காணிகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 454) மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பன, காணி ஆணையாளர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயற்பட்டு, நிபந்தனைகளுக்கு இணங்க பயன்படுத்தப்படாத காணி வழங்கல்களை இரத்து செய்வதற்கும், அக்காணிகளை மீண்டும் பொறுப்பேற்பதற்கும் இடமளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள 'யுக்தி கேந்திரய' அமைப்பு, அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை, விசேடமாக நியமிக்கப்பட்ட எந்தவொரு அமைப்பும் இன்றி, இந்த விதிகளின் கீழ் சட்டப்பூர்வமாக மீளப்பெற முடியும் என வலியுறுத்தியுள்ளது.

கிழக்குக் கடற்கரையோரத்தில் காணப்படும் உயர் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தி, கடற்கரை கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அவசரமாக முறையான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், கிழக்குக் கடற்கரையோரத்தை ஒட்டிய ஹோட்டல்களை நடாத்திச் செல்லும்போது அரச அதிகாரிகள் பாரபட்சமின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தை அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றை வகுப்பதற்கும் கடந்த ஜூன் 22ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட விசேட குழுவொன்றின்றி, தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயே தீர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள நீதி மையம், தேவையானது புதிய பொறிமுறையொன்றல்ல, மாறாக தற்போதுள்ள சட்டத்தை அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக, பாரபட்சமின்றியும் ஸ்திரமாகவும் அமுல்படுத்துவதற்கான அரசியல் உறுதியே ஆகும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

'யுக்தி கேந்திரய' அமைப்பின் தலைவர் சாஃபி எச். இஸ்மாயிலின் கையொப்பத்துடன் ஜூன் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பிய கடிதத்தில், கடற்கரை வலயத்திற்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கும், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளருக்கு ஏற்கனவே முழு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் மேலாண்மைச் சட்டமானது கடற்கரை வலயத்திற்குள் இடம்பெறும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதுடன், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குகிறது. 1950ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க காணிக் கொள்வனவுச் சட்டமானது (Land Acquisition Act), ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறை மறுஆய்விற்கான (Judicial Review) அணுகலுடன், பொது நோக்கங்களுக்காக காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நியாயமான மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்கக்கூடிய நடைமுறையை வழங்குகிறது. பிரதேச செயலாளர்கள், காணி ஆணையாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு, செயற்படுவதற்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது."

இதற்கமைய, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, வெளிப்படைத்தன்மையுடனான பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு (Public Consultation) நடத்தப்படும் வரை, 2026 ஜூன் 22ஆம் திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு அல்லது அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு 'யுக்தி கேந்திரய' அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

"அரசியலமைப்பின் 12ஆம் உறுப்புரைக்கு இணங்க, காணி துஷ்பிரயோகம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்ட அமுலாக்கல் நடவடிக்கையையும் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாக அமுல்படுத்துமாறும், போதுமானதும், தேசிய மட்டத்திலான எல்லைப்பரப்பைக் கொண்டதுமான, நீதித்துறை மேற்பார்வைக்கு உட்பட்ட தற்போதைய சட்டக் கட்டமைப்பையே இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் கருவியாக மாற்றுமாறும் நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம்."

'கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாத்தல்' என்ற பெயரில் விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பாக ஜூன் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மான அறிவித்தலில், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படாமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை அமைக்கும் போது பொதுவான அளவுகோல்களிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவற்றின் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் நேரடித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கிழக்கின் காணி விவகார விசேட குழுவை மீளப்பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation