Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ராகமவின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2026 • 5:11 PM

ராகமவின் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரிவிற்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • இச்சம்பவத்தில் காயமடைந்த 7 கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • ஏனைய 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எழுத்து அளவு:

பிரிவிற்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது:

    1. 246/கெந்தலியத்தப்பாரை - மேற்கு (246/Kendaliyaddapara - West)

    2. 246/சி கெந்தலியத்தப்பாரை - வடக்கு (246/C Kendaliyaddapara - North)

    3. 181/ஜி தம்புவ (181/G Dambuwa)

    பின்னணியும் தற்போதைய நிலைமையும்

    மஹர சிறைச்சாலைக்குள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கு இடையே மோதல் நிலைமை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த 7 கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனைய 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து, கைதிகளின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி பெருமளவில் கூடினர்.

    இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஃப்.யு. டுட்லர் (A.F.U. Tutler) தெரிவித்தார்.

    தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

    எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

    சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

    Tamil Leader • எங்களைப் பற்றி

    Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

    மேலும் வாசிக்க (Read More)→

    கலந்துரையாடல் (0)

    உரையாடலில் இணையுங்கள்

    கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

    கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...