எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக அதிகரித்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கையும் 32 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 1,024 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், அவர்களுள் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள் இன்னமும் கொசுக்கள் (மளம்புகள) பெருகும் இடங்களை முழுமையாகச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்காமையே இந்நிலைமைக்கு முதன்மைக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய வைத்தியர், வரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், கொசுக்கள் பெருகும் இடங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளிலேயே டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படுவதால், இது குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என வைத்தியர் கபில கன்னங்கர கேட்டுக்கொண்டுள்ளார்.


