சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றவும்¸ தமிழ் மக்கள் தமது நிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் அரசாங்கங்களினால் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எரிவாயு நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் அது தொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் ஆர்வலரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்திற்கு நேற்றுடன் (08) பத்து நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லையென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன.

இலங்கை மற்றும் நேபாளில் தாம் விரும்பும் வகையிலான ஆட்சியமைக்கும் திட்டம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமித் ஷா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து குறித்த பெயரில் இலங்கையில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லையெனவும் இலங்கையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் அதிகாரமுள்ள தேர்தல் ஆணைக்குழு இது குறித்து முடிவெடுக்கும் எனவும் ரமேஷ் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராகவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி